மாசி மக உற்சவ பற்றாக்குறையை நிவர்த்தி செய்தவர்கள் விபரம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 22-02-2016 அன்று நடைபெற்ற மாசி மஹா மக தீர்த்தோற்சவ நிகழ்வின் வரவு செலவு அறிக்கையை முன்னர் வெளியிட்டிருந்தோம்.

குறித்த வரவு செலவு அறிக்கையின் படி மொத்த வரவாக  19,840/= ரூபாவும், மொத்த செலவாக   49,475/= ரூபாவும், பற்றாக்குறையாக 29,635/= ரூபாவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த மாசி மஹா மக தீர்த்தோற்சவ நிகழ்வுக்கு புலம்பெயர் அடியார்களின் பங்களிப்பு சிறிதளவும் கிடைக்காததனாலேயே  பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது எனவும், மேற்படி நிகழ்வில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலம்பெயர் அடியார்களின் ஒத்துழைப்பை நல்குமாறும் வேண்டியிருந்தோம்.

அதன் பிரகாரம் குறித்த நிகழ்வுக்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறை நிதியை தந்துதவிய அடியார்களின் விபரத்தை வெளியிடுகின்றோம்.

01. திரு ஆ.சுந்தரலிங்கம்  – லண்டன்          –              ரூபா  20,000/=
02. திரு. ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா  –  ரூபா    8,600/=
03. திரு மு.கணேசமூர்த்தி  – லண்டன்                    –   ரூபா  30,000/=
04. திரு. சி.செல்லையா குடும்பம் – அவுஸ்.         –   ரூபா    2,500/=

எனவே எமது வேண்டுகோளையேற்று நிதியுதவி வழங்கி ஒத்துழைப்பு நல்கிய அடியார் பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விசேட குறிப்பு
எதிர்வரும் மே மாதம் தொடக்கம் 2016ம் ஆண்டிற்குரிய முதல் நான்கு மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கை வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து  ஒவ்வொரு மாத அறிக்கையும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாத முடிவிலும் வெளியிடப்படும் என்பதையும் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு