நவராத்திரி விரத விஷேட பூஜை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும்  வீர மஹா காளியம்மன் ஆலயத்தில்  எதிர்வரும் 15-10-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி விரத விஷேட பூஜை ஆரம்பமாகின்றது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

23-10-2023 திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை உற்சவம் நடைபெறவுள்ளது. 24-10-2023 செவ்வாய்க்கிழமை விஜயதசமியுடன்  நவராத்திரி விரதம் முடிவடைகின்றது. அன்று மாலை கேதாரகௌரி விரதம் ஆரம்பம்.

நவராத்திரி விரத காலங்களில் தினமும் எமது ஆலய பரிவார தெய்வமான வீரமகா காளியம்மனுக்கு மாலை 04.00 மணிக்கு விஷேட பூஜை நடைபெறும் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

உபயகாரர்கள் விபரம்
15-10-2023 – நவராத்திரி 1ம் நாள் – நா.குமரேசு – நாகர்.மேற்கு
16-10-2023 – நவராத்திரி 2ம் நாள் – ஆ.மாரிமுத்து – நாகர்.கிழக்கு
17-10-2023 – நவராத்திரி 3ம் நாள் – த.வதனராசா – நாகர்.கிழக்கு
18-10-2023 – நவராத்திரி 4ம் நாள் – கெ.பிரியங்கா‐ அவுஸ்
19-10-2023 – நவராத்திரி 5ம் நாள் – நா.ஹரிசன் – லண்டன்
20-10-2023 – நவராத்திரி 6ம் நாள் – ர.விதுஸ் – லண்டன்
21-10-2023 – நவராத்திரி 7ம் நாள் – சு.நாகலட்சுமி – நாகர்.கிழக்கு
22-10-2023 – நவராத்திரி 8ம்நாள் – ந.செல்வராசா- நாகர்.கிழக்கு
23-10-2023 – நவராத்திரி சரஸ்வதி பூஜை – சி.சிவகணேசன்– லண்டன்
24-10-2023 – நவராத்திரி– விஜயதசமி – ந.நேகா – லண்டன்
24-10-2023 செவ்வாய்க்கிழமை – கேதார கௌரி விரதம் ஆரம்பம்

நவராத்திரி விரத விஷேட பூஜைகளில் அடியார்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தரிசித்து காளியம்மனின் அருளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்