சரஸ்வதி பூஜை உற்சவம் – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருக்கும் வீரமகா காளியம்மனுக்கு, சரஸ்வதி பூஜையின் இறுதி நாளான 23-10-2023 திங்கட்கிழமை உற்சவம் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் காளியம்மனுக்கு விஷேட ஸ்நபனாபிஷேகம். தொடர்ந்து விஷேட நைவேத்தியங்கள் நிவேதனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுவதுடன், ஓதுவார்களினால் சரஸ்வதி தோத்திரங்கள் இசைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து சுமார் 5.00 மணியளவில் வசந்த மண்டபத்தில் அலங்கார ருபமாக வீற்றிருக்கும் காளியம்மனுக்கு விஷேட பூஜாராதனைகள் நடைபெற்று சிறப்பு பஜனைப் பிரார்த்தனையுடன் உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு இடம்பெறும்.

அடியார்கள் அனைவரும் வருகைதந்து சரஸ்வதி தேவியாக எழுந்தருளப் பெறும் காளியம்மனின் திவ்விய தரிசனம் கண்டு திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் சி.சிவகணேசன் குடும்பம் – லண்டன்

நிர்வாக சபையினர்