வரலட்சுமி விரத பூஜை! – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-08-2023 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத விஷேட பூஜையும் நூற்காப்பு வழங்கலும் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.அன்று பி.பகல் 3.00 மணியளவில் வரலட்சுமி விரத விஷேட பூஜை நடைபெறவுள்ளது.

வரலட்சுமி விரதம் சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களும் அனுஷ்டிக்கின்ற சிறப்பு மிக்க விரதமாகும்.

கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடிக்கின்றனர்.

இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் திருமணத் தடைஇருக்கும் கன்னிப்பெண்களுக்கு தடை நீங்கி திருமணம் சீக்கிரம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும். வீடு மனை வாகனம் வேண்டிக் கொள்பவர்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.

பூஜை முடிந்த பிறகு அங்கு ஆலய குருக்களால் வழங்கப்படும் நூற்காப்பை திருமணமான பெண்கள் என்றால் அவர்களுடைய கணவர்கள் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். திருமணமாகாதவர்கள் சுமங்கலிப் பெண் ஒருவரால் கட்டிக் கொள்ள வேண்டும்.

மேற்படி பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் பெண் அடியார்கள் ஆலய கருமபீடத்தில் முன்கூட்டியே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

பூஜைக்குரிய கட்டணம் – 1,000 ரூபா

மேலதிக விபரங்களை ஆலய கரும பீடத்தில் அறிந்து கொள்ளலாம்.

நிர்வாக சபையினர்