ஆடிப்பூரம் உற்சவம்! – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக கொலுவீற்றிருந்து அருள்பாலிக்கும் வீர மகா காளியம்மனுக்கு எதிர்வரும் 22-07-2023 சனிக்கிழமை ஆடிப்பூரம்
உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆடிப்பூர நாள் அம்மன் பூப்படைந்த நன்னாளாகும். அதனை முன்னிட்டு அன்றைய தினம் பிற்பகல் 2-30 மணியளவில் காளியம்மனுக்கு விஷேட ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து சிறப்பு நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு விஷேட பூஜை இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் வசந்த மண்டபத்தில் அழகிய அலங்கார ரூபத்தோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜாராதனைகள் நடைபெற்று, விஷேட பஜனைப் பிரார்த்தனைகளுடன் உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு இடம்பெறும்.

ஆகவே ஆடிப்பூர உற்சவ நன்னாளில், அருள்மிகு காளியம்மன் அடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகைதந்து, அருள்மிகு காளியம்மனைத் தரிசித்து வேண்டிய நல்வரங்களைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – க.சிவபாதசுந்தரம் குடும்பம் – பருத்தித்துறை

நிர்வாக சபையினர்