பங்குனி உத்தர உற்சவம்! – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 05-04-2023ம் திகதி புதன்கிழமை பங்குனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் மு.பகல் 10.30 மணியளவில் எம்பெருமானுக்கு ஸ்நபனாபிஷேகமும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு உருத்திராபிஷேகமும் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து விசேட பூஜாராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் அலங்கார மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு சோடசோபசாரங்களுடன் கூடிய சிறப்பு பூஜாராதனைகள் நடைபெற்று, விஷேட பஜனைப் பிரார்த்தனையுடன் உள்வீதி உலா வரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.

முருகையாவுக்கும் தெய்வானையம்மனுக்கும் திருமணம் நடைபெற்ற நாளாகிய பங்குனி உத்தர நாள் சிறப்பு பூஜையில் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் தவறாது முகக் கவசம் அணிந்து, கலந்து கொண்டு எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவைத் தரிசித்து,திருவருளையும், இஷ்ட சித்திகளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – சுந்தரலிங்கம் பார்த்திபராசா குடும்பம் – லண்டன்

நிர்வாக சபையினர்