ஆவணி ஞாயிறு உற்சவம் – 2021

murukaiya-01நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இவ்வருடம் முதல் ஆவணி மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விஷேட அபிஷேகம், உற்சவம் என்பன நடைபெறவுள்ளன என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அதற்கமைய எதிர்வரும் 22-08-2021, 29-08-2021, 05-09-2021 மற்றும் 12-09-2021 ஆகிய நான்கு திகதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முற்பகல் 10 .30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெறும்.

தொடர்ந்து வசந்தமண்டபத்தில் அலங்கார ரூபமாக எழுந்தருளியிருக்கும் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜாராதனைகள் நடைபெற்று, விஷேட பஜனைப் பிரார்த்தனையுடன் எம்பெருமான் உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஆகவே, ஆவணி  ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ள அபிஷேகம் மற்றும் உற்சவ நிகழ்வுகளில் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு தரிசித்து முருகையாவின் திருவருளைப் பெற்றேகுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயகாரர் விபரம்

22-08-2021 – வளர்மதி மதிவதனன்  குடும்பம் – நோர்வே

29-08-2021 – மலர்விழி குமார்  குடும்பம் – நோர்வே

05-09-2021 – ராதிகா இராசசிங்கம் – நோர்வே

12-09-2021 – அனித்தா மதிராஜ் குடும்பம் – நோர்வே

5 ஞாயிற்றுக்கிழமைகள் வரும் காலங்களில் 5வது பூஜையை வீரகத்தி இராசசிங்கம் குடும்பம் – நோர்வே, பொறுப்பேற்று செய்யவுள்ளனர்.

நிர்வாக சபையினர்