ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆடிப்பூர உற்சவம்! – 2021

kaliநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ வீர மஹா காளியம்மனுக்கு எதிர்வரும் 11-08-2021 புதன்கிழமை, ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் முற்பகல் 11.30 மணிக்கு ஸ்ரீ வீரமஹா காளியம்மனுக்கு ஸ்நபன அபிசேகம் நடைபெற்று தொடர்ந்து ஓதுவார்களினால் அபிராமி அந்தாதி படிப்பு நடைபெறும்.

தொடர்ந்து விசேட பிரசாதங்கள் நிவேதனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜாராதனை இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.00 மணியளவில் வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக வீற்றிருக்கும் வீரமஹா காளியம்மனுக்கு விசேட தூப தீபங்கள் அடங்கிய சோடசோபசார பூஜாராதனைகள் நடைபெற்று விஷேட பஜனை பாராயணத்துடன் உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.

எனவே அன்றைய ஆடிப்பூர உற்சவ நிகழ்வில் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு வீரமஹா காளியம்மனைத் தரிசித்து அருள் பெற்றுய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

உபயகாரர் – திரு.க.சிவபாதசுந்தரம் குடும்பம் – பருத்தித்துறை

நிர்வாக சபையினர்