ஐயனார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்!– 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனார் மூர்த்திக்கு எதிர்வரும் 14-01-2021 வியாழக்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்றைய தினம் மாலை 3.00 மணிக்கு ஐயனார் பெருமானுக்கு ஸ்நபனாபிஷேகமும் மற்றும் மூலவருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் உருத்திராபிஷேகமும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெற்று, தொடர்ந்து மகர ஜோதி ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.

எனவே அடியார்கள் அனைவரும் 14-01-2021ம் நாளன்று மாலை ஐயனார் பெருமானுக்கு நடைபெறவுள்ள அபிஷேகம் மற்றும் விஷேட பூஜைகளில் தவறாது கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஐயனார் பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றேகுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

உபயம் – திரு மு.கதிர்காமு குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்