தைப்பொங்கல் விஷேட பூஜை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 14-01-2021 வியாழக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் காலை 7.00 மணிக்கு மூலவருக்கு விஷேட படிக்கட்டு அபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை நடைபெறும்

அத்துடன் பொங்கல் பொங்கும் நிகழ்வு உபயகாரர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

தைப்பொங்கல் சிறப்பு பூஜை நிறைவடைந்ததும் பொங்கல் பிரசாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

அடியார்கள் அனைவரும் தவறாது தைப்பொங்கல் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அருள்மிகு முருகையாவைத் தரிசித்து திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

உபயம் – ஆ.அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

குறிப்பு
எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவின் அனைத்து உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களை தேவஸ்தான நிர்வாக சபை தெரிவித்துக்கொள்கிறது.

நிர்வாக சபையினர்