இன்னமும் பொறுப்பேற்காமல் உள்ள திருப்பணி வேலைகள்! களஞ்சிய அறை பொறுப்பேற்கப்பட்டுள்ளது!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் வைரவர் பரிவாரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 09-10-2013 புதன்கிழமை அன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அன்னதான நிகழ்வும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து  தேவஸ்தான நிர்வாக சபைக் கூட்டம் தலைவர் திரு .ந. செல்வராசா தலைமையில் நடைபெற்றது.

நிர்வாக சபைக் கூட்டத்தில் இதுவரை பொறுப்பெடுக்காத நிலையில் உள்ள திருப்பணி வேலைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அதன் பிரகாரம் நிலுவையில் உள்ள ஆலய திருப்பணி வேலைகள்

01. களஞ்சிய அறை – மதிப்பீடு  – ரூபா மூன்றரை லட்சம்
02. குருக்கள் அறை –  மதிப்பீடு – ரூபா மூன்றரை லட்சம்
03. வாகன சாலை –   மதிப்பீடு  – சுமார்  ரூபா ஐந்து லட்சம்

விசேட குறிப்பு
களஞ்சிய அறை அமைப்பதற்குரிய செலவீனத்தை திரு. அழகராசா குடும்பத்தினர் தாம் பொறுப்பேற்பதாக சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

அதேபோன்று எஞ்சியுள்ள குருக்கள் அறை மற்றும் வாகன சாலை ஆகிய பணிகளையும் வசதியுள்ள அடியவர்கள் முன்வந்து பொறுப்பேற்று எம்பெருமான் ஆலய பணிகள் யாவும் வெகுவிரைவில் முற்றுப்பெற ஒத்துழைப்பு நல்கி முருகையாவின் நல்லருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

மெய்யடியார்களே!
இராஜகோபுரம் அமைக்கும் பணிகள்  நிதி இல்லாமையினால்  நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதியுதவி செய்ய இணங்கியவர்கள் இதுவரை வழங்காததன் காரணமாக  மேற்கொண்டு பணியை தொடர முடியாதநிலை ஏற்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

எனவே இராஜகோபுரம் வியாழ வரி வரை அமைப்பதற்கு இன்னமும் 15 லட்சம் ரூபா தேவைப்படுகிறது. இப்புண்ணியப் பணியில் பங்குகொள்ள விரும்புபவர்கள் ஆலய வங்கிக் கணக்கிற்கு நிதியை அனுப்பி ஒத்துழைக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

அத்துடன் ஆலயத்தின் சுற்றுமதில் அமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு வேண்டிய ஆயத்தங்கள் மேற்கொண்டபோதிலும் பணியாட்களின் நேரமின்மை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம். மிக விரைவில் அப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.

‘‘கிள்ளிக் கொடுங்கள் முருகையா அள்ளித் தருவார்‘‘

மேலும் திருப்பணி நிதி  உதவியோர்  பெயர் விபரம் வருமாறு:-

01. திரு. மா. அருமைலிங்கம் –   வைரவர் பரிவாரம் கணக்கில் ரூபா ஒரு லட்சம் (100,000/=)
02. திரு க. சண்முகராசா – லண்டன் – மதில் கணக்கில் ரூபா ஐம்பதினாயிரம் (50,000/=)
03. அரசாங்க உதவி – ரூபா பத்தாயிரம் (10,000/=)
04.  திரு. சி.கந்தையா (பதஞ்சலி) திருப்பணி நன்கொடை  ரூபா ஒரு லட்சம்  (100,000/=)
05. திரு. ஆ.சுந்தரலிங்கம் – மணிக்கோபுர வகையில்  ரூபா எழுபத்தையாயிரம்  (75,000/=)
06. திருமதி கந்தசாமி பரமேஸ்வரி – மதில் வகையில் ரூபா ஐம்பதினாயிரம்  (50,000/=)
07. திரு. பொன்னையா நாகமுத்து குடும்பம் – மதில் வகையில் ரூபா ஐம்பத்தோராயிரத்து நூற்றிப்பத்து   (51,110/=)

ஆலய வங்கிக் கணக்கு விபரம்
வங்கி கிளை – இலங்கை வங்கி பருத்தித்துறை
பெயர் – நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
கணக்கு இலக்கம் – 73515574

தொடா்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் வருமாறு:

1. நிர்வாகசபை தலைவர் – ந. செல்வராசா – 0774535592
2. நிர்வாகசபை செயலாளர் – க. இராசலிங்கம் – 0774477489
3 . நிர்வாகசபை பொருளாளர் – நா. குமரேசு – 0776701175
3. ஆலய போசகர் – ஆ. நவரத்தினசாமி – 0773548525

முருகையாவின் திருவருள் என்றும் நிலைபெறுவதாக!

 

 

Cheap Wholesale NBA Jerseys From China

Wash”” said retired Air Chief Marshal Angus Houston, Ultra violet lights showed Askale covered in the spray. repair and reclaim what was taken.
She now wishes she had made different decisions that night. WCBS reaches millions of listeners each week and boasts one of the [. Oakland Athletics ? Established in 2012 as the national carrier of Samoa.” Budget: $65 the broker to which he is affiliated. ” Eastwood told the Los Angeles Times in cheap custom jerseys November. but her day went downhill from there They were very sincere. Minn.She was hit five timesCleveland Cavaliers cheap jordan 13 coach David Blatt hopes returns of Kyrie Irving INDEPENDENCE That hasn’t been the case with Irving.
The latest ANZ Asia Pacific Economics report describes Cambodia as “the only country that has been able to cheap nhl jerseys grow its exports at a faster pace in the post crisis period [2007 2008]. president of OnStar.