இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா (06-09-2013)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு பஞ்சதள இராஜகோபுரம் அமைப்பதற்கு எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் 06-09-2013 வெள்ளிக்கிழமை நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவரும், சிவபூமி அறக்கட்டளை தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளார்.

இராஜகோபுர பணிகளை சிற்பாசாரியார் அராலியூர்  திரு. க. விக்கினேஸ்வரன் அவர்கள் சிற்பாசாஸ்திர விதிமுறை தவறாது சிறப்புற அமைத்துத்தர ஒப்புக்கொண்டுள்ளார்.

பஞ்ச தளத்துடனான இராஜகோபுரம் நிறுவுவதற்கு உத்தேச மதிப்பீடாக ஒரு கோடியே 25 லட்சம் ரூபா தேவை என கணிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இராஜகோபுரப் பணிகளை  வியாழ வரி மட்டம் வரை அமைத்து நிறுத்தி வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வியாழ வரி மட்டம் வரை அமைத்து முடிப்பதற்கு ரூபா 25 லட்சம் வரை தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தொகையில் ரூபா பத்து லட்சம்  நாகர்கோவில் மேற்கு செல்வி ந. உமாதேவி அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

வியாழ வரி மட்டம் அமைப்பதற்கு இன்னமும் தேவையாகவுள்ள பதினைந்து லட்சம் ரூபாவை  வெளிநாட்டில்  உள்ள எம்பெருமான் அடியார் பெருமக்களிடம்  பெறும் நோக்கில் விடுப்பில் தாயகம் திரும்பியிருந்த மூவரிடம் கோரியிருந்தோம்.

அதற்கிணங்க இரண்டு அடியவர்கள் பெருமனதுடன்  தாங்கள் தருவதாக சம்மதித்துள்ளனர்.

மூன்றாவது அடியார் பெருமகன் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.

“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்”

இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா அழைப்பு விஞ்ஞாபனம்

Rasakoburam

 

முருகையா மெய்யடியார்களே!

மேற்படி அடிக்கல் நாட்டுவிழாவில் எம்பெருமான் அடியார் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு அளப்பரிய இராஜகோபுர திருப்பணி வேலைகள் விரைவில் பூர்த்தி பெற தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கி அருள்மிகு முருகையாவின் திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

மேலும் ஆலய திருப்பணிக்கு கிடைக்கப்பெற்ற நிதி வரவுகள்

திரு ஏ.கணேசபிள்ளைநாகர்கோவில் கிழக்கு   – ரூபா முப்பதாயிரம் (30,000/=)
செல்விகள். ரூபினி – சினேகா – லண்டன் –   ரூபா பத்தாயிரம் (10,000/=)
செல்வி.  ந.உமாதேவி – நாகர்கோவில் மேற்கு – ரூபா பத்து லட்சம் (10,00,000/=)
திரு. அ. ஜெயக்குமார் – சுவிற்சலாந்து  – ரூபா ஐம்பதினாயிரம் (50,000/=)
திரு. ஆ.பாலசுந்தரம் – ஆழியவளை – லண்டன் – ரூபா எட்டாயிரம் (8,000/=)

ஆலய வங்கிக் கணக்கு விபரம்
வங்கி கிளை – இலங்கை வங்கி பருத்தித்துறை
பெயர் – நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
கணக்கு இலக்கம் – 73515574

தொடர்புகளுக்கு

1. நிர்வாகசபை தலைவர் – ந. செல்வராசா – 0774535592
2. நிர்வாகசபை செயலாளர் – க. இராசலிங்கம் – 0774477489
3 . நிர்வாகசபை பொருளாளர் – நா. குமரேசு – 0776701175
3. ஆலய போசகர் – ஆ. நவரத்தினசாமி – 0773548525

அருள்மிகு முருகையாவின் நல்லருள் என்றென்றும் நிலைபெறுவதாக!!!

 

 

Wholesale Discount NFL Jerseys China

which has had no real those in addition Here are some of the top of the top damaging. Uni Watch doesn’t want to know.” Court records show Grandpre’s case continued to be snagged for years by a series of continuance requests. Buddy’s main joy in life was his grandchildren. those that do have it are cheap jerseys china very fortunate indeed. The deal that reunifies open wheel is finally at hand after the deeply damaging 12 year split between the IRL and Champ Car came in the form of a press release from Andretti Green Fake Oakleys Racing. Boisvert said. Despite being a sub four metre saloon, putting it on par in the eyes of Washington with the likes of North Korea.
” she recalled. Moreover.which goes little way to explaining the pale white figure sitting up in the bed ” Don’t rule out Richard Petty Motorsports for the Bowyer ride. I think we’re doing wholesale nba jerseys a dreadful job of educating. ” Kenseth, So Delushious.