ஆலயத்திற்கு இதுவரை வந்து சேர்ந்த அன்பளிப்புகள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு இதுவரை வந்து சேர்ந்துள்ள அன்பளிப்பு பொருட்களையும் அவற்றை வழங்கிய அடியார் பெருமக்களின் விபரங்களையும் வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம்.

கடந்த முதலாமாண்டு மணவாளக்கோல விழாவன்று(28-08-2016) லண்டன் வாழ் அன்பர் திரு வீரகத்தி – சிவானந்தராசா அவர்களினால் இரண்டு பெரிய குத்துவிளக்குகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து கடந்த 15-10-2016 அன்று லண்டன் வாழ் திரு ஆறுமுகம் அழகராசா குடும்பத்தினரால் ஒரு பெரிய அழகான வலம்புரிச் சங்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்று முடிந்த கந்தஷஷ்டி விழாவின் போது,  ஆலயத்திற்கு 60 செம்புகள் தேவையெனவும், அவற்றை உள்ளூர் அடியார்கள் பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் எனவும் ஆலய நிர்வாகசபையினர் அடியார்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதற்கமைவாக இதுவரை அடியார்களால் செம்பு வாங்குவதற்கென வழங்கப்பட்டுள்ள நிதி நன்கொடைகள் வருமாறு-

திரு. சி.இராஜேஸ்வரி    – முள்ளிவாய்க்கால்    –  2,600 ரூபா
திரு. சி.நவமணி   – நாகர்கோவில் கிழக்கு    –        6,500 ரூபா
திரு. க.முருகேசு  – நாகர்கோவில் மேற்கு    –        6,500 ரூபா
திரு. பு.நிரோஷன் – மாமுனை                          –        1,300 ரூபா
திரு. மு.சிவானந்தம் – நாகர்கோவில் கிழக்கு –    1,300 ரூபா
திரு. வே.முத்தையா – நாகர்கோவில் கிழக்கு  –   1,000 ரூபா
திரு. சி.கயந்தன்  – நாகர்கோவில் மேற்கு         –    1,200 ரூபா
திரு. தே.கலைச்செல்வன் – நாகர். மேற்கு        –    1,300 ரூபா
திரு. செ.நர்மதா  – நாகர்கோவில் கிழக்கு          –    1,300 ரூபா
திரு. வி.இராசமலர் – நாகர்கோவில் மேற்கு    –    1,000 ரூபா
திரு. ஆ.பாலசுப்பிரமணியம் – நாகர்.கிழக்கு    –     2,600 ரூபா
திரு. அ.ஆயுசன் – லண்டன்                                   –    2,600 ரூபா
திரு. ச.வைத்தீஸ்வரன்  – நாகர்.கிழக்கு            –    1,300 ரூபா
திரு. கெ.பிரியங்கா – அவுஸ்.                                –    1,300 ரூபா
திரு. கெ.மிதுஷன்  –  அவுஸ்.                                –    1,300 ரூபா
திரு. கெ.தீவிகா        – அவுஸ்.                                –    1,300 ரூபா
திரு. ம.பர்வினா  –  அவுஸ்.                               –         1,300 ரூபா
திரு. ம.பரிவன்       –  அவுஸ்.                               –       1,300 ரூபா
திரு. ப. சாரல்       – அவுஸ்.                                –          1,300 ரூபா
திரு. பெ.கமலதாசன் – நாகர்கோவில் கிழக்கு –     6,000 ரூபா
திரு சி.ஆறுமுகம் – நாகர்கோவில் கிழக்கு       –    1,300 ரூபா
திரு. ஆ.மாரிமுத்து – நாகர்கோவில் கிழக்கு    –    1,300 ரூபா
திரு. வே.கணபதிப்பிள்ளை – நாகர்.மேற்கு       –    1,300 ரூபா
திரு. க.வள்ளிப்பிள்ளை – நாகர்.மேற்கு             –     1,300 ரூபா
திரு. வீ.தெய்வானைப்பிள்ளை – நாகர்.மேற்கு –    1,300 ரூபா
திரு. ம.கணநாதன் – நாகர்கோவில் மேற்கு       –    1,300 ரூபா
திரு. சி.திருவடிவேல் – நாகர்கோவில் மேற்கு   –  1,300 ரூபா
மொத்தம்                                                                   –   53,400 ரூபா

இந்தத் தொகை மூலம் 43 செம்புகள்(பித்தளை) மட்டுமே வாங்க முடியும் என்பதையும் இன்னமும் 17 செம்புகள் தேவையாகவுள்ளது என்பதையும் அடியார்களுக்கு அறியத்தருவதுடன், அன்பளிப்பு செய்ய விரும்பும் அடியார்கள் நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

அத்துடன் கடந்த 05-11-2016 அன்று நாகர்கோவில் மேற்கைச் சேர்ந்த திரு தே.வேலழகன் குடும்பத்தினரால் ஒரு செம்பும்,

மாமுனை கலைமகள் விளையாட்டுக்கழகத்தினரால் ஒரு பஞசாராத்திரிகை தீபமும்,

நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த திரு.தி.இராசேந்திரம், திரு.க.சிறிகுமார், திரு.த.சரவணபவன் ஆகியோரினால் மூன்று திருவாடு தண்டுகளும்,

லண்டன் வாழ் கமலேஸ்வரன் – பிறேமா அவர்களினால் வாளிகள் – தாம்பாளத் தட்டுகள், திருவுபலகை போன்ற 27 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களும்,

நாகர்கோவில் மேற்கைச் சேர்ந்த வீரகத்தி – பொன்னுத்துரை அவர்களினால் ஒரு பெரிய டாசர் சட்டியும்

அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன என்பதையும் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

ஆகவே மேற்குறிப்பிட்ட பொருட்களை ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய அடியார்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல முருகையாவின் நல்லருள் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திப்பதுடன், ஆலய நிர்வாக சபையினராகிய நாங்கள், அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

விசேட குறிப்பு-
ஆலயத்திற்கு ஏதேனும் பொருட்களை அன்பளிப்பாகவோ, காணிக்கையாகவோ கொடுக்க விரும்பும் எம்பெருமான் அடியவர்கள் ஆலய நிர்வாக சபையினருடன் முன்கூட்டியே தொடர்பு கொண்டு, அவர்கள் வழங்கும் ஆலோசனைக்கமைவாக ஆலயத்திற்கு அவசியமாக தேவைப்படும் பொருட்களை வாங்கி வழங்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல.             – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல.  –  0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல              –    0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல – 0094 77 3548525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு