நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 01-02-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
அன்று முற்பகல் 10.00 மணியளவில் மூலமூர்த்திக்கு விஷேட ஸ்நபனாபிஷேகமும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு உருத்திராபிஷேகமும் நடைபெற்று தொடர்ந்து சிறப்பு நைவேத்தியங்கள் நிவேதிக்கப்பட்டு விஷேட பூஜை இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக காட்சியளிக்கும் வல்லி தேவசேனா சமேத முருகையாவுக்கு சோடசோபசாரங்களுடன் கூடிய விஷேட தூப, தீபாராதனைகள் அடங்கலாக சிறப்பு பூஜை இடம்பெற்று விஷேட பஜனை பிரார்த்தனையுடன் எம்பெருமான் உள்வீதி உலாவரும் உற்சவம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து கந்தபராண படனம் முற்றோதல் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.00 மணியளவில் ஆலய மண்டபத்தில் “புதிர் வழங்கல்“ நிகழ்வு ஆரம்பமாகும் என்பதையும் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
தொடர்ந்து திருமடத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அடியார்கள் அனைவரும் தவறாது வருகை தந்து மேற்படி நிகழ்வுகளில் கலந்து கொண்டு எம்பெருமானைத் தரிசித்து, புதிர் வழங்கல் நிகழ்விலும் அன்னதான நிகழ்விலும் பங்குபற்றி, அருள்மிகு முருகையாவின் திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
உபயம் – திரு. கதிரேசு மலர்வேணியம்மா குடும்பத்தினர் – வல்வெட்டித்துறை
நிர்வாக சபையினர்