நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை, எதிர்வரும் 25-12-2025 வியாழக்கிழமை ஆரம்பமாகி 03-01-2026 சனிக்கிழமை வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
விரத ஆரம்ப தினமான 25-12-2025 வியாழக்கிழமை முதல் தினமும் அதிகாலை 4.00 மணிக்கு மூலமூர்த்திக்கு உருத்திராபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை நடைபெறும்.
தொடர்ந்து சிவகாமியம்மை சமேத நடராஜப் பெருமானுக்கு விஷேட பூஜாராதனைகள் இடம்பெற்று, ஓதுவா மூர்த்திகளின் திருவெம்பாவை பாடல்கள் பாராயண நிகழ்வுடன் பூஜை நிறைவுபெறும்.
அதனைத்தொடர்ந்து திருவாதவூரடிகள் புராண படனம் நடைபெறும்..
உபயகாரர்கள் விபரம்
01. பொ.நாகமுத்து குடும்பம்
02. வே.மயில்வாகனம் குடும்பம்
03. ஏ.கணேசபிள்ளை குடும்பம்
04. அ.கண்ணையா குடும்பம்
05. ந.செல்வராசா குடும்பம்
06. பொ.பழனியாண்டி குடும்பம்
07. ந.சபாரத்தினம் குடும்பம்
08. கு.நாகதம்பி குடும்பம்
09. கி.குணசீலன் குடும்பம்
10. க.சிவப்பிரகாசம் குடும்பம்
எனவே உபயகாரர்கள் அனைவரும் தவறாது அதிகாலை வேளையில் வருகை தந்து தங்களது உபயங்களில் கலந்து கொண்டு எம்பெருமானைத் தரிசித்து நல்லருளையும், இஷ்ட சித்திகளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பூஜைக்குரிய கட்டணம் – 9,500ரூபா
நிர்வாக சபையினர்