ஆலய திருப்பணி வரவு செலவு அறிக்கை! 05 – 03 – 2014 தொடக்கம் இற்றைவரை..!

ஆலயத்தில் 05 – 03 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும்  செலவுகளும் அடங்கிய அறிக்கையை  வெளியிடுகின்றோம்.

முன்னர் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் ஆரம்பித்த நாளான 06 -05 – 2013 தொடக்கம் 04 – 03 – 2014 வரையுமுள்ள வரவு செலவு அறிக்கை விபரத்தை வெளியிட்டிருந்தோம்.

தற்போது அதன்பின்னராக எம்பெருமான் அடியவர்களால் வழங்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளையும், நடைபெற்ற திருப்பணி வேலைகளுக்கான செலவு விபரங்களையும் வெளியிடுகின்றோம்.

05 – 03 – 2014 ற்குப் பின்னர் கிடைத்த திருப்பணி நிதி நன்கொடை வரவு விபரம்

05 – 03- 2014 அறிக்கையின் படி கையிருப்பு –                                   15,33,041/=

01. திரு. க. முருகையா – லண்டன் –                                                        40,000/=
02. திரு. பொ. பழனியாண்டி குடும்பம்  – லண்டன்  –                        85,000/=
03. திரு. ஆ. சுந்தரலிங்கம் குடும்பத்தினர் – லண்டன்  –               2,00,000/=
04. திரு. க. நித்தியானந்தம் குடும்பத்தினர் – லண்டன் –                 18,600/=
05. திரு. இ. தர்மகுலசிங்கம் குடும்பத்தினர்  –  லண்டன்-               32,250/=
06. திரு. ஆ. மயில்வாகனம் குடும்பத்தினர் – அவுஸ்.. –               2,99,900/=
07. திரு. சி. கேதீஸ்வரன்- குந்தி குடும்பம்  – சுவிஸ்  –                  1,00,000/=
08. திரு. மு. கதிர்காமு குடும்பத்தினர் – நாகர்.- கிழக்கு –                50,000/=
09. திரு கரன் – கொவன்றி – லண்டன் –                                                  10,800/=
10. திரு. வடிவேலு- தர்மதேவி குடும்பத்தினர் – நாகர்.- தெற்கு  – 9,300/=
11. திரு. வே. சிதம்பரநாதன்(சிவம்) – நாகர்.- தெற்கு –                     10,000/=
12. திரு. த. திவிக்குமார் – சுவிஸ் –                                                          14,700/=
13. திரு. மு. கணேசமூர்த்தி – லண்டன்  –                                                6,000/=
14. திரு. திரு. புவனேஸ்வரன் – ஜீவா குடும்பம் – லண்டன் –        10,100/=
15. திரு. தாமு வல்லிபுரம் குடும்பத்தினர்- நாகர். – மேற்கு –         25,000/=
16. திரு. அ. அசோக்ராஜ் குடும்பம் – கற்கோவளம் –                           3,000/=
17. திரு. க. சிவபாதம் – கொடிகாமம்                                                        5,000/=

இதுவரை மொத்த வரவு –                                                                   24,52,691/=

குறிப்பு
05 -03- 2014ம் திகதியிலிருந்து  நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்கள் மனமுவந்து வழங்கிய நன்கொடைகளுக்கான வரவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

யாதாயினும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் ஆலய நிர்வாக சபை பொருளாளருடனோ அல்லது கீழ் குறிப்பிடப்படும் நிர்வாக சபை உறுப்பினர்களிடமோ தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

ஆலய  திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களுக்கு எம்பெருமான் நல்லருள் புரிவாராக!

05 -03 – 2014  ற்குப்  பின்னர்  நடைபெற்ற திருப்பணி வேலைகளுக்குரிய செலவு விபரம்

01.  சல்லி 4 டிப்பர் லோட்                                                                        1,40,000
02.  செங்கல் – 4000                                                                                         48,500/=
03.  கம்பி – 5 நூல், அரை, கால் இஞ்சி, கட்டுக்கம்பி                     3,51,084/=
04.  மணல் ஏற்றிய உழவுயந்திரக் கூலி                                              38,992/=
05.  சீமேந்து  295 பைகள்                                                                          2,74,125/=
06. ஆசாரியாருக்கு கூலி கொடுத்த வகையில்                             8,85,000/=
07.  களஞ்சிய அறை கோப்பிசம் (கூரை)  கூலி                                 16,000/=
08.  களஞ்சியம், மடப்பள்ளி -கூரை மரம், தீராந்தி                        1,09,400/=
09.  பாதுகாப்பு ஊழியர் சம்பளம்                                                             17,000/=
10.  பிற செலவு – வாளி, கயிறு, சாப்பாடு                                               7,715/=
11.  வாட்டர் பம் செலவு                                                                                 2,000/=
12.  யன்னல் – கதவு செய்ய முற்பணம்                                                 12,000/=

இதுவரை மொத்தச் செலவு                                                             19,01,816/=

ஆக இதுவரை கிடைத்த மொத்த வரவு                                          24,52,691
ஆக இதுவரை  செய்த மொத்த செலவு                                           19,01,816

31-05-2014 ம் திகதிய  கையிருப்பு                                                        5,50,875/=

குறிப்பு
அதேவேளை, 05 -03-2014ம் திகதியிலிருந்து ஆலயத்தில் நடைபெற்ற திருப்பணி வேலைகளுக்குரிய செலவுகளை மொத்தமாக தொகுத்து வெளியிட்டுள்ளோம்.

செலவு அறிக்கை தொடர்பாக யாதாயினும் விளக்கங்கள் தேவைப்படுமிடத்து எந்த நேரத்திலும் பொருளாளரிடம் விரிவான செலவு அறிக்கை உள்ளது. பார்வையிடலாம். என்பதையும் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

முக்கிய குறிப்பு
தற்போது ஆலயத்தில் இராஜகோபுரப் பணிகள் வியாழவரி மட்டத்தை எட்டியுள்ளதுடன், பிளாட் பண்ணப்பட்டுள்ளது என்பதையும் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

மேற்கொண்டு பணிகளை தொடர்ந்து செய்வதற்கு பணம் போதாமல் உள்ளது.   தற்போது தனிப்பட்ட உபயங்களை பொறுப்பேற்றுள்ள அடியார்கள் முற்பணமாக வழங்கிய பணத்தில் தான் இராஜகோபுரப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே எம்பெருமானுடைய பணிகளை இடைவிடாமல் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு புலம்பெயர்ந்துள்ள எம்பெருமான் அடியவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறிய தொகையாகுதல் வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன்,  எம்பெருமானது  பணிகள் விரைவில் நிறைவுபெற்று அடுத்த ஆண்டு குடமுழுக்கு விழா என்னும் கும்பாபிஷேகத்தை நடாத்த ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.

குறிப்பு –
இராஜகோபுரப்பணிகளை செய்வதற்குப் போதிய நிதி இல்லாத போதிலும், மற்றைய வேலைகளின் ஒழுங்குக்கமைவாக  முதலில் இராஜகோபுர வேலையை முடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தான் கடன்பட வேண்டிய நிலை  ஏற்பட்டது என்பதை வேதனையுடன் அறியத்தருகின்றோம்.

ஆலய இராஜகோபுரத்தின் தற்போதைய தோற்றம்

DSC_3891 DSC_3892 DSC_3895 DSC_3899

நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்

இலங்கை வங்கி – பருத்தித்துறை கிளை
கணக்கு இலக்கம் – 73515574

தொடர்புகளுக்கு –

வெளிநாடு –
ஆறுமுகம் – சுந்தரலிங்கம் – லண்டன்
தொலைபேசி இலக்கம் –  0044 7459219252

இலங்கை –
1. நடராசா – செல்வராசா – தலைவர்
தொலைபேசி இல. – 0094 774535592
2. நாகதம்பி – குமரேசு – பொருளாளர்
தொலைபேசி இல. – 0094 776701175
3. கணபதிப்பிள்ளை – இராசலிங்கம் -செயலாளர்

தொலைபேசி இல. – 0094 774477489
4. ஆறுமுகம் – நவரத்தினசாமி – போஷகர்

தொலைபேசி இல. – 0094 773548525