ஆலய மூடு மண்டபம் அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் சுற்றுக்கொட்டகை (மூடு மண்டபம்) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை எம்பெருமான் உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

மூடு மண்டபம் அமைப்பதற்கு மொத்தமாக 24 தூண்களும் 12 ஆட்ஸ்களும் அவற்றை இணைக்கும் வீம்களும் அமைக்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எம்பெருமான்  அடியார்களே! நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் ஆலயத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியடையாமல் உள்ள இராஜகோபுரப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்காமல், அதைவிட்டு தற்போது மூடு மண்டபத்தை அமைப்பது எதற்காக என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அலயத்தில் சுற்றுப்பிரகாரம் (மூடு மண்டபம்) அமைக்காமல் எம்பெருமானின் பாத தாமரையாகிய இராஜகோபுரப் பணிகளை முன்னெடுக்க கூடாது என சைவச் சான்றோர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அத்துடன் மழை காலங்களில் உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு மேற்கொள்வதிலும் பல சங்கடங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தான் நிர்வாக சபையினராகிய நாம் எதுவும் செய்ய முடியாத நிலையில் கடன்பட்டு சாமான்களை வாங்கி சுற்றுக்கொட்டகை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆகவே எம்பெருமான் அடியார் பெருமக்களே!

ஆலயத்தின் கடந்த கால திருப்பணிகள் யாவும் தாங்கள் மனமுவந்தளித்த நிதியுதவியின் அடிப்படையில் தான் உரிய காலத்தில் பூர்த்தி செய்து கும்பாபிஷேகத்தை நடாத்த முடிந்தது. அதேபோன்று தற்போதைய மூடு மண்டபம் அமைக்கும் புனிதப் பணியிலும் தங்களது ஒத்துழைப்பு முருகையாவின் திருவருளுடன் பூரணமாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

மூடு மண்டபம் அமைக்கும் (கூரை தவிர்ந்த) திருப்பணிக்கு சுமார் 35 லட்சம் மூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு தூண்கள் ஆட்ஸ் உடன் சேர்த்து அமைத்து இடை வீம்கள் உட்பட அமைக்க சுமார் மூன்று லட்சம் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது  அடியார்கள் சிலர் இரண்டு தூண்கள் அமைக்கும் பணியை பொறுப்பேற்றுள்ளனர்.

01  ஆ.மயில்வாகனம்  குடும்பம் – அவுஸ்திரேலியா
02  நாராயணன் – ஹரிசன்  – லண்டன்
03 சிதம்பரப்பிள்ளை – யோகேஸ்வரன் – லண்டன்

தாங்களும் மேற்குறித்த பணிகளை தனித்தோ அல்லது சேர்ந்தோ மேற்கொள்ளலாம். விரும்பிய அன்பர்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் வேண்டிநிற்கின்றோம்.

தூண் அமைக்கும் பணியைத் தனித்து பொறுப்பேற்றுச் செய்ய இயலாத  உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவியை மனமுவந்து அளித்து அருள்மிகு முருகையாவின் புனிதப்பணியை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்

இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை
01. சேமிப்புக் கணக்கு இலக்கம்  – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. –   79059813

தொடர்புகளுக்கு –

வெளிநாடு  (சர்வதேசம்) – பொறுப்பாளர்
ஆறுமுகம் – சுந்தரலிங்கம்
தொலைபேசி இலக்கம் –  0044 7459219252

அவுஸ்திரேலியா – பொறுப்பாளர்
ஆறுமுகம் – மயில்வாகனம்
தொலைபேசி இலக்கம் –  0061 387075911

1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –           0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –   0094 77 6685054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –    0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: