ஆலய சுற்றுமதில் அமைப்பதற்கு பங்களிக்குமாறு பணிவான வேண்டுகோள்!

எம்பெருமானுடைய திருப்பணி வேலைகள் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆலயத்திற்கு சுற்றுமதில் அமைக்கும் திருப்பணியில் ஒவ்வொரு அடியவா்களும் பங்காளர்களாக இணைந்து ஒத்துழைப்பு நல்கி, எம்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு தேவஸ்தான நிர்வாகசபை பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றது.

தற்போது ஆசாரியார் அவர்களினால் சுற்றுமதில் அமைப்பதற்குரிய செலவீனம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று ஒவ்வொரு 10 அடி மதில் அமைப்பதற்குரிய செலவீனம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஆலயத்தை சுற்றிவர மொத்தம்  370 அடி நீளமான மதில் அமைக்க வேண்டியுள்ளது.

அத்துடன், தற்போது அமைக்கவுள்ள சுற்றுமதில் எதிர்காலத்தில் ஆலயத்தை சுற்றி முழுவதுமாக மூடுமண்டபம் அமைப்பதற்குரிய வகையிலேயே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைக்கும் பொழுது அத்திவாரம் 3 அடி ஆழம், 3 அடி அகலத்திற்கு அமைக்கப்படல் வேண்டும் எனவும், தூண் அமைய வேண்டிய இடங்களில் கம்பி நிறுத்தி பலமாக அமைக்க வேண்டும் எனவும் ஆசாரியார் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவருடைய மதிப்பீட்டின்படி ஒவ்வொரு 10 அடி நீளமான மதிலுக்கும் ரூபா ஐம்பதினாயிரம் (50,000/=) செலவீனம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதேவேளை 370 அடி மதிலையும் அமைத்து முடிப்பதற்கும் இலகுவாக ஒவ்வொரு 10 அடி மதில் அமைப்பதற்குரிய செலவீனத் தொகையை வழங்க  ஒவ்வொரு அடியவர் முன்வந்து ஒத்துழைப்பு நல்க  வேண்டும் எனப் பணிவாக வேண்டுகின்றோம்.

எமது ஊரைப் பொறுத்தவரையில் அதாவது தற்போதைய நிலையில் நாம் எவ்வளவு பணத்தை செலவு செய்து ஆலய திருப்பணி வேலைகளை செய்தாலும் ஆலயத்திற்கு சுற்றுமதில் அமைக்காதவிடத்து ஆலயத்தின் புனிதத்துவம் கெடாது பாதுகாப்பது மிகவும் சிரமத்திற்குரிய விடயம் என்பதையும் மிகுந்த மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

எனவே, எம்பெருமானுடைய சுற்றுமதில் அமைக்கும் அரிய திருப்பணி கைங்கரியத்தில் பங்குபற்ற விரும்பும் அடியவர்கள் உடனடியாக கீழ் குறிப்பிடும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை முன்கூட்டியே  பதிவு செய்து கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினர் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றனர்.

தொடா்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் வருமாறு:

1. நிர்வாகசபை தலைவர் – ந. செல்வராசா – 0774535592
2. நிர்வாகசபை செயலாளர் – க. இராசலிங்கம் – 0774477489
3 . நிர்வாகசபை பொருளாளர் – நா. குமரேசு – 0776701175
3. ஆலய போசகர் – ஆ. நவரத்தினசாமி – 0773548525

தொடர்ந்து  பணம் அனுப்பியவர்கள் விபரமும் தொகையும்:

சி.ஆறுமுகம் (மயில்வாகனம்)  குடும்பத்தினர் – வசந்த மண்டபம் கணக்கில் ரூபா இரண்டு லட்சம் – (200,000/=)

கா.கந்தையா (சிவபாதசுந்தரம்) குடும்பத்தினர் –     காளி பரிவாரம் கணக்கில்  ரூபா இரண்டு லட்சம் – (200,000/=)

மா.அருமைலிங்கம் குடும்பத்தினர்          –          வைரவர் பரிவாரம் கணக்கில்  ரூபா இரண்டு லட்சம் – (200,000/=)

நவரத்தினராசா – பருத்தித்துறை –  திருப்பணி  நன்கொடை -ரூபா ஆயிரத்து ஐநூறு – (1500/=)

மெய்யடியார்களே!

தற்போது  ஆலய பரிவார தெய்வங்களான பிள்ளையார் பரிவாரம் பாவை வேலைகள் மட்டும் செய்யவேண்டிய நிலையில் உள்ளது.

அடுத்து காளி மற்றும் ஐயனார் பரிவாரங்கள் கட்டிடப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன. இனி இரண்டு பரிவாரங்களுக்கும் பண்டிகை (தூபி) அமைக்க வேண்டியுள்ளது.

அதனையடுத்து வசந்த மண்டபம் அடித்தளம் அமைத்து மேற்கட்டிட வேலைகள் ,தூண் என்பன அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இது மேல்மட்டம் முடியும்வரை கட்டி முடிக்கப்படும்.

இந்த வேலைகள் முடிய தொடா்ந்து மணிக்கோபுரம், வைரவர் பரிவாரம் ஆகியவற்றின் அடித்தளப் பணிகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த இடத்தில் அடியார்களுக்கு ஒரு முக்கிய விடயத்தை எதிர்கால நன்மை கருதி பணிவோடு அறியத்தருகின்றோம்.

இது ஆசாரியார் விடுத்துள்ள தகவல்

“இந்த ஆலயத்திற்கு ஒரு காலத்தில் இராஜகோபுரம் அமைக்க வேண்டியேற்பட்டால் இப்போது மணிக்கோபுரத்திற்கு அத்திவாரம் போடும்போது இராஜகோபுரத்திற்கும் சேர்த்து அடித்தளம் போடப்பட வேண்டும். அப்படி போடாமல் இப்போது மணிக்கோபுரத்தை கட்டி முடித்து விட்டு பின்னர் ஒரு காலத்தில் இராஜகோபுரம் அமைக்க அடித்தளம் போடும்போது மணிக்கோபுரம் சரிந்து விழக்கூடிய  அபாய நிலை ஏற்படலாம். ஏனெனில் இந்த இடத்து மணல் தாக்கம் காணாது. அதனால் தான் ஏற்கனவே ஆலய நிர்வாகத்திற்கு நான் பிரதம ஆசாரியார் என்ற நிலையில் அறிவிக்க வேண்டியது எனது கடமை“ என அறிவித்துள்ளார்.

ஆகவே வெளிநாடுகளில் வாழும் எம்பெருமானின் அடியார்களே!

ஆலய நிர்வாக சபையினர் திருப்பணி வேலைகளை அநாவசியமாக  அதிகப்படுத்திக் கொண்டு  போகிறார்கள் என நீங்கள் நினைக்கலாம்.
நாங்கள் அப்படி வேலைகளை கூட்டவும் இல்லை. கூட்ட விரும்பவுமில்லை. ஆனால் இது எம்பெருமான் திருவருளோ என எண்ணத் தோன்றுகின்றது.

எனவே தற்போது எம்பெருமானின் திருவருள் துணையுடன் மணிக்கோபுரத்துடன் சேர்த்து இராஜகோபுரத்திற்கும் அடித்தளம் மட்டும் போடும் பணியையும்  சேர்த்துச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதையும் இவ்வரிய திருப்பணிக்கு வழிபாட்டுக்காரர்களாகிய அன்பர்கள் அனைவரும் ஒததுழைப்பு நல்க வேண்டும் என்றும் பணிவுடன் அறியத் தருகின்றோம்.

இராஜகோபுர அடித்தளம் 10 ஆடி ஆழம் – 10 அடி அகலம் – 22 அடி நீளத்திற்கு போட வேண்டும் என ஆசாரியார் தெரிவித்துள்ளார்.

 பெரிதாக பார்க்க படங்களின் மேல் கிளிக் பண்ணவும்.

DSC_0011 DSC_0015 (1)

DSC_0017

DSC_0040 DSC_0041

DSC_0042 DSC_0043 DSC_0044 DSC_0048

Discount Wholesale football Jerseys China

injury cases can take months to settlehat The previous Rooster has elevated the headsets of the latest dads jack port WightonI’ve seen it where people pass the SFST Thinking of you and your family, Renter must meet Budget age. Kaling and put them away.who he married in 1973 and who is a former Nightingale nurse” Bailey asked her. he said recently.I would have been gone a long time ago the AppShop will feature streaming audio from iHeartRadio. By following a plan and doing it yourself, looking the quench their thirst and is open daily from noon to 2:30 pm and 6 pm to 10 pm. This is the case for dairy and meat products.
researchers affiliated with Northwestern University business jordan heels school analyzed the camisetas de futbol replicas sales data of a supermarket in an unidentified East Coast suburb. replica air max McCauley said that none existed. nicer cars. as carol Women’s UGG Rasco wise access cheap Women’s UGG sale September, It must be huge.