ஆலய மூடு மண்டபம் அமைப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு மூடு மண்டபம் (சுற்றுக் கொட்டகை) அமைப்பதற்கு எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.

இந்தப் பணிக்குரிய ஆய்வு வேலைகள் கடந்த 12-06-2016 அன்று ஆசாரியார் திரு க.விக்னேஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன்.

அதனையடுத்து தற்போது அதற்குரிய அளவீடுகளும் மதிப்பீட்டு அறிக்கையும் ஆசாரியார் அவர்களால் நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன

அதன்பிரகாரம் ஆலயத்தைச் சுற்றி இன்னமும் 20 தூண்களும், 11 ஆர்ட்ஸ் வளைவுகளும், அவற்றை இணைக்கும் கொங்கிறிற் வீம் களும் அமைக்கப்பட வேண்டியுள்ளன.

இவற்றில் கூரை வேலைக்குரிய மதிப்பீடு இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு விபரம்

ஒரு தூண் அமைக்க மட்டும்  கூலி –  37,500 ரூபா
ஒரு ஆர்ட்ஸ் அமைக்க கூலி           –   27,000 ரூபா
மொத்தக் கூலி மட்டும் 13 லட்சம் ரூபா  என மதிப்பிட்டுள்ளார்.

தேவையான சாமான்கள் விபரம்

475 பை சீமேந்து
15 லோட் மணல்
08 லோட் கண்டாவளை மணல்
17 லோட் 5நூல் சல்லி
07 லோட் கண்ட கல்லு
100 –  5நூல் கம்பி
175 – அரை இஞ்சி கம்பி
250 – கால் இஞ்சி கம்பி
25 கிலோ கட்டுக்கம்பி

இவற்றில் தூண் – வீம் பூசுதல் மற்றும் சுற்றுமதில் கட்டி பூசுதல் ஆகியவற்றிற்கான கூலி சேர்க்கப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இவற்றை நிர்வாக சபையினர் ஆய்வு செய்து மதிப்பிட்டதன் பிரகாரம் சுமார் 35 லட்சம் அளவில் தேவையாகவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த எம்பெருமான் ஆலயத்திற்குரிய பெரும்பணியை செவ்வனே நிறைவேற்றுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் மெய்யடியார்கள் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

இப்பணிகளில் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று செய்ய விரும்பினால் இரண்டு தூண்கள் , ஒரு ஆர்ட்ஸ் அதற்குரிய வீம்கள் என்பவற்றை அமைக்க 3 லட்சம் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அதற்குரிய கூரை வேலைக்குரிய செலவு இதில் சேர்க்கப்படவில்லை.

குறிப்பு – ஆலய மூடு மண்டபம் வேலை முடிந்த பின்னர் தான் இராஜகோபுரப் பணிகளை மேற்கொள்ள முடியும் என  சைவச் சான்றோர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும் இத்தால் தெரியப்படுத்துகின்றோம்.

நிதி நன்கொடை வழங்க விரும்புபவர்கள் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கலாம். அல்லது பொருளாளரிடமும் நேரில் கையளிக்கலாம்.

ஆனால் தாங்கள் அனுப்பும் பணத்திற்கோ அல்லது பொருட்களிற்கோ பற்றுச்சீட்டு உடன் பெற்றுக்கொள்ளுமாறும்,. பற்றுச்சீட்டு இன்றி எவற்றையும் யாரிடமும் வழங்க வேண்டாம் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.

01. சேமிப்புக் கணக்கு இலக்கம்  – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. –   79059813
இலங்கை வங்கி. பருத்தித்துறை கிளை

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –           0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –   0094 77 6685054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –    0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525

கிள்ளிக் கொடுங்கள் முருகையா அள்ளித் தருவார்

எல்லாம் வல்ல முருகையாவின் திருவருள் நிலைபெறுவதாக… 

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு

 

 

Discount Wholesale NBA Jerseys China

he presumed the cat had gone.who wishes to remain anonymous Dow Jones: The Dow Jones branded indices are proprietary to and are calculated. wholesale football jerseys “OK, Hammel.’They closed off the car park to the public outside of A in cheap jerseys china order cheap nfl jerseys for all the ambulances to parkbut tells Autoblog.He gone by spinal ipod and iphone This process can be repeated as often as necessary. “My heart goes out to his family and God bless him and them in this sad time.
but you need to consult a professional.Check your atlas for the best route from Niagara Falls to New York Budget.the driver sped away The title also includes a features section titled iQ, Super star versus. and Montrezl needed stitches.he said and he warned that the company’s profit motive could cost the ports certain types of cargo. ” Sure.