கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் எதிர்வரும் 14-11-2023ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

இவ்வருடம் கந்தஷஷ்டி விரதம் 14-11-23 செவ்வாய்க்கிழமை கும்ப வைப்பு நிகழ்வுடன் ஆரம்பமாகி 18-11-23 சனிக்கிழமை சூரன் போர் நிகழ்வுடன், அதாவது ஐந்து நாட்கள் மட்டுமே அனுஷ்டிக்கப்படுகிறது.

14-11-2023 செவ்வாய்க்கிழமை கந்தஷஷ்டி விரத உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக முற்பகல் 9.30 மணியளவில் கும்ப வைப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

விரதம் அனுஷ்டிக்கும் மெய்யடியார்கள் நேரகாலத்திற்கு வருகைதந்து கும்பவைப்பு நிகழ்வில் கலந்து கொண்டு விரத உத்தியானம் செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

அதனைத் தொடர்ந்து விஷேட அபிஷேகம், விசேட பூஜாராதனைகள் நடைபெற்று கந்தபுராணப் (சூரபன்மன் வதைப்படலம்) படிப்பு நடைபெறும்.

கந்தஷஷ்டி விரத உற்சவ நாட்களில் பகல் பூஜாராதனைகள் நிறைவடைந்த பின்னர் சர்க்கரைத் தண்ணீர், ஆலய திருமடத்தில் அன்னதானம் என்பன நடைபெறும் என்பதையும் விரதம் அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் விஷேட பூஜாராதனைகள் இடம்பெற்று, மங்கல வாத்தியங்களுடன் வள்ளி தேவசேனா சமேத முருகையா அலங்கார ரூபமாய் எழுந்தருளி உள்வீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து கந்தபுராணப் படிப்பு நடைபெற்று உற்சவம் நிறைவு பெறும்.

இவ்வாறாக தொடர்ந்து நான்கு நாட்களும் உற்சவ நிகழ்வு நடைபெற்று கந்தஷஷ்டி விரத இறுதி நாளான 18-11-2023 சனிக்கிழமை மாலை சூரசம்மார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

சூரசம்மார நிகழ்வைத் தொடர்ந்து ஆலயத்தில் பிராயச்சித்த அபிஷேகம், விஷேட பூஜை, கும்பச் சரிப்பு நிகழ்வு என்பன நடைபெற்று அன்றைய நிகழ்வு நிறைவு பெறும்.

அன்றிரவு பாரணைப் பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று மறுநாள் 19-11-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 6-30 மணியளவில் பாரணை பூஜை நடைபெறும்.

திருக்கல்யாண உற்சவம்
19-11-2023 ஞாயிற்றுக்கிழமை பாரணைப் பூஜை முடிவடைந்த பின்னர் முற்பகல் 10.00 மணியளவில் தெய்வயானையம்மன் திருக்கல்யாண உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான கந்தபுராணப் படிப்பு நடைபெறும்.

அன்றைய தினம் மாலை விசேட அபிஷேகம் நடைபெற்று விஷேட பூஜாராதனையுடன் தெய்வானையம்மன் திருக்கல்யாண விழா வெகு கோலாகலமாக நடைபெற்று தொடர்ந்து எம்பெருமான் வெளிவீதி உலா வந்தருளுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சூரபன்பன் திக்கு விஜயம்
கந்தஷஷ்டி விரதோற்சவ நான்காம் நாளன்று 17-11-2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00மணியளவில் சூரபன்மன் திக்கு விஜயம் இடம்பெறும்

கந்தஷஷ்டி விரதோற்சவ நாட்களில் அனைத்து அடியார்களும் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கு நடைபெறும் அனைத்து விஷேட உற்சவ நிகழ்வுகளிலும் கலந்து எம்பெருமானின் திவ்விய தரிசனம் கண்டு தரிசித்து திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கந்தஷஷ்டி விரத உற்சவ உபயகாரர்கள் விபரம்

14-11-23 செவ்வாய்- 1ம் நாள் – திரு. ஆ.அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

15-11-23 புதன் – 2ம் நாள் – திரு. சி.ஈசுரபாதம் குடும்பத்தினர்- நாகர்கோவில் தெற்கு – திரு. தா.வல்லிபுரம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

16-11-23 வியாழன் – 3ம் நாள் – திரு. வே.சிதம்பரநாதன் குடும்பத்தினர் – நாகர்கோவில் தெற்கு

17-11-23 – வெள்ளி – 4ம் நாள் – திரு. ந.சபாரத்தினம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

18-11-23 சனி – 5ம் நாள் – திரு. மா.சாம்பசிவம் குடும்பத்தினர்- நாகர்கோவில் கிழக்கு
18-11-23 சனி – 5ம் நாள் – சூரன் போர் – பொது

19-11-23 ஞாயிறு – பாரணை பூஜை – பொது

19-11-23 ஞாயிற்றுக்கிழமை – தெய்வானையம்மன் திருக்கல்யாண உற்சவம் – திரு.மு.உதயகுமார் (நாள்சீட்டு) குழுவினர் நாகர்கோவில் வடக்கு

20-11-2-23 திங்கட்கிழமை – வைரவர் மடை – ஆலய பிரதம குரு திரு.நா.நாகேந்திரக் குருக்கள் – கரணவாய்

முருகையா அடியார்களே!
சூரசம்மார உற்சவ நிகழ்வு, பாரணை அன்னதான நிகழ்வு ஆகியன பொதுப் பூஜையாக நடைபெறவுள்ளதால் எம்பெருமான் உள்ளூர், வெளிநாட்டு அடியார்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை வழங்குவதுடன், பாரணைக்குரிய அன்னதானப் பொருட்களை கொடுத்துதவுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

விரதகாரர் கட்டணம் – 1.500 ரூபா

நிர்வாக சபையினர்