மூன்றாவது மணவாளக்கோல விழா – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-07-2022 வெள்ளிக்கிழமை மூன்றாவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மூலவருக்கு நவோத்தர சகஸ்ர (1009) சங்காபிஷேகமும் மற்றைய பரிவார தெய்வங்களுக்கு ஸ்நபனாபிஷேகமும் இடம்பெற திருவருள் கைகூடியுள்ளது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கலுடன் பகல் நிகழ்வுகள் நிறைவுபெறும்.

அதனையடுத்து ஆலய திருமடத்தில் அன்னதானம் இடம்பெறவுள்ளது.

மாலை 5.00 மணியளவில்  வசந்தமண்டப பூஜை இடம்பெற்று விநாயகர், வள்ளி தேவசேனா சமேத முருகையா, காளியம்மன் ஆகிய மூன்று சுவாமிகளும் அழகிய பூந்தண்டிகையில் வெளிவீதி உலாவரும் உற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது.

மெய்யடியார்கள் அனைவரும் அபிஷேகத்திற்குத் தேவையான பால், நெய் இளநீர், பூமாலைகள் மற்றும் உதிரிப் பூக்கள் என்பவற்றுடன் வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்து தங்களின் தீய வினைகளைப் போக்கி முருகையாவின் பேரருளினைப் பெற்றேகுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தனிப்பட்ட உபயங்களும் உபயகாரர்களும்
01. அன்னதானம் – சி.ஜெயக்குமார்- சுவிஸ்
02. விஷேட மேளம் – ஆ.அழகராசா குடும்பம்- லண்டன்
03. மாலை, வெள்ளை அலங்காரம் – க.பாஸ்கரன்- சுவிஸ்
04. ஒலி, ஒளி அமைப்பு – ஆ.மயில்வாகனம்- அவுஸ்திரேலியா
05. பூந்தண்டிகை – ஆ. சிவானந்தராசா- (அவுஸ்.) கொடுக்கிளாய், ஆழியவளை
06. முருகையா சாத்துப்படி- ஏ.கணேசபிள்ளை- நாகர்கோவில் கிழக்கு
07. விநாயகர் சாத்துப்படி – கி.சிவசாமி- நாகர்கோவில் கிழக்கு
08. காளியம்மன் சாத்துப்படி – க.சிவபாதசுந்தரம் குடும்பம்- பருத்தித்துறை

முருகையாவின் மெய்யடியார்களே!
எம்பெருமானின் மணவாளக்கோல விழாவுக்குரிய தனிப்பட்ட உபயங்களை மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து அடியார்களும் பொறுப்பேற்றுள்ள அதேவேளை,

பொது உபயமான சங்காபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் தங்களாலியன்ற நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

நிர்வாக சபையினர்