புரட்டாதி சனி விரதம் – அபிஷேகம் விஷேட பூஜை

நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தானத்தில்  புரட்டாதி மாத ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அபிஷேகம் விஷேட பூஜை என்பன நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

அதற்கமைய எதிர்வரும் 18-09-2021, 25-09-2021, 02-10-2021, 09-10-2021, 16-10-2021 ஆகிய தினங்களில் இவ்வரும் புரட்டாதிச்சனி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றன. அன்றைய தினம் வழமைபோல் எல்லா மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெறுவதுடன், சனீஸ்வரப் பெருமானுக்கு விஷேட அபிஷேகம் நடைபெறவுள்ளது.

ஆகவே, புரட்டாதி மாத சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ள அபிஷேகம், விஷேட பூஜை நிகழ்வுகளில் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு பாவ தோஷங்களைப் போக்கும் எள்ளெண்ணெய் தீபம் ஏற்றுதல், தோஷ அர்ச்சனை பண்ணுதல், எள் சாதம் வைத்தல் ஆகியனவற்றில் பங்குகொண்டு சனீஸ்வரப்பெருமானின் திருவருளைப் பெற்றேகுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

அபிஷேக உபயகாரர் விபரம்
18-09-2021 – புரட்டாதி 1வது சனி – வீ.இராசசிங்கம் குடும்பம் – நோர்வே
25-09-2021 – புரட்டாதி 2வது சனி – 

02-10-2021 – புரட்டாதி 3வதுசனி – ம.ஈழதாசன் குடும்பம்- அவுஸ்.
09-10-2021 – புரட்டாதி 04 சனி – ரங்கநாதன் விதுஸ்- லண்டன்
16-10-2021 – புரட்டாதி கடைசி சனி–  ஆ.மயில்வாகனம்- அவுஸ்.

நிர்வாக சபையினர்