மணவாளக்கோல (வருஷாபிஷேகம்) உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மணவாளக்கோல ( கும்பாபிஷேக நாள்) உற்சவம் எதிர்வரும் ஆவணி மாதம் 12ம் (28-08-2016) திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் இரவு நிகழ்ச்சிகளாக வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் பகல் நிகழ்வாக,சுமார் 10 மணியளவில், மூல மூர்த்தியான வள்ளி, தேவசேனா சமேத முருகையாவுக்கு 1008 சங்காபிஷேகமும், ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு ஸ்நபனாபிஷேகமும் நடைபெற்று தொடர்ந்து விஷேட தவில் நாதஸ்வர மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து ஆலய திருமடத்தில் அன்னதானம் இடம்பெறும்.

மாலை நிகழ்வாக சுமார் 5.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி உலா நடைபெற்று, அதனைத் தொடர்ந்து சுமார் 6.30 மணியளவில் மின்சார தீபங்களால் அலங்கரிக்கப் பெற்ற விசேட சப்பறத்தில் வெளிவீதி உலாவரும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகளில் மெய்யடியார்கள் அனைவரும் அபிஷேகத்திற்குத் தேவையான பால், இளநீர், மற்றும் பூஜைக்குரிய பூக்கள் என்பவற்றுடன் வருகைதந்து எம்பெருமானைத் தரிசித்து தங்களின்  தீய வினைகளைப் போக்கி சிறப்புடன் வாழ முருகையாவின் நல்லருளைப் பெற்றேகுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

பகல் – விஷேட நிகழ்ச்சிகள்
01. விசேட மேளக்கச்சேரி  இரண்டு கோஷ்டி – உபயம் – ஆ.அழகராசா குடும்பம்  – லண்டன்

பாடசாலை மாணவர்கள் நடாத்தும் வில்லிசை நிகழ்வு – விடயம் அரிச்சந்திரா

02. அன்னதானம் – உபயம். – சிவலிங்கம் – ஜெயக்குமார் குடும்பம் – சுவிஸ்.

ஆலய அலங்காரம் – உபயம் – கண்ணையா – பாஸ்கரன் – சுவிஸ்

03. அஷடோத்தர சகஸ்ர (1008) சங்காபிஷேகம் – உபயம் – பொது

இரவு  – விசேட நிகழ்ச்சிகள்
01.  தென்னிந்திய கலைஞர்கள் பங்குபற்றும் விசேட இன்னிசைக் கச்சேரி –   உபயம் திரு. ஆ.மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா

02. விசேட சாத்துப்படி  – உபயம் – திரு. ஏ.கணேசபிள்ளை குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு

03. சப்பறம்  –  உபயம்  – திரு பா.அருள்தரன் குடும்பம் – சுவிஸ்

மின்சார அமைப்பு –   இந்திர தீபம் – பருத்தித்துறை

முருகையா அடியார்களே!  
இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் தங்களாலியன்ற நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு  பணிவன்புடன் வேண்டிக்கொள்கி பொதுவாறோம்.

ஆகவே, முருகையாவின்  பெண் அடியார்கள் வீதி துப்புரவு பணியிலும் ஆண் அடியார்கள் சுவாமி காவுதல், தீபங்கள், பாத்திரங்கள், குடங்கள் விளக்குதல் போன்ற சரீரத் தொண்டுகளிலும் தவறாது பங்குபற்றி, ஒத்துழைப்பு நல்கி எம்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

விஷேட குறிப்பு 
மேற்குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளில் மேளக்கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, விசேட சாத்துப்படி, சப்பறம், அன்னதானம்  மற்றும் ஆலய அலங்காரம் ஆகிய நிகழ்வுகளை தனிப்பட்ட வகையில் அடியார்கள் பொறுப்பேற்றுள்ளனர். அவர்களுக்கு ஆலய நிர்வாக சபையினராகிய நாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்   கொள்கின்றோம்.

அதேபோன்று ஏனைய, மின்சார  தீபம் உபயத்தையும் தனியாகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து பொறுப்பேற்றுச் செய்ய முன்வருமாறு அடியார்களிடம் வேண்டுகின்றோம். அவ்வாறு பொறுப்பேற்றுச் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கிய குறிப்பு
அன்றைய தினம் ஆலய மூடு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. அடியார்கள் அனைவரும் அப்புனித கைங்கரியத்திலும் தவறாது கலந்து கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்

தொடர்புகளுக்கு
நா. குமரேசு – தலைவர்     – தொ.இல.      0094 77 670 1175
வி. விக்கினேஸ்வரன் – உபதலைவர் –  0094 77 634 3649
சி. கலீபன் – செயலாளர்   –                           0094 76 765 9415
சி. சிவாயநம – பொருளாளர்  –                    0094  77 668 5054
ப. அருள்தாஸ் – உபசெயலாளர் –              0094 77 324 0457
சே. ரவிச்சந்திரன் – உறுப்பினர் –                0094 76 706 2123
ப. ஐங்கரன் – உறுப்பினர்    –                         0094 77 517 3572
இ. ரவிச்சந்திரன் – உறுப்பினர்  –                 0094 77 087 1465
ந. செல்வராசா  –  உறுப்பினர்  –                   0094 77 453 5592
ஆ.நவரத்தினசாமி – போஷகர் –                 0094  77 354 8525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு

 

 

 

 

Discount Wholesale Jerseys Supply

alot of people will be grieving this lossIt was shocking to learn that the NZIFF is the only film festival in the world that has to pay to have their films rated. Holly Baker is often pulled in five different directions.
His shirts and pants are always pressed no wrinkles and his shoes are shined just like when he was in the Marines. sales began just this month and only a handful of shops have opened there. It’s possible. Crosby ready fourth in a NHL featuring. During fourth grade.”He asked me if I had heard about the missing Jewish kid They must qualify in A couple weeks later on, She followed If a gamer is considered to be concerning green Sox, As it turns out. Labour of love brings old police car to life custom jerseys again By all accounts” “We were cheap air max hanging out with friends and the car was there.Palache was arrested and booked on suspicion of criminally negligent homicide.
which related to the insurance risk faced by ACC McKee had identified Buyers quick to change fashions can ground up their existing car into fine particles again and use the materials to make a new model.” “Landy actually came into the showroom two weeks prior michael kors handbags to that.