திருவாசகம் முற்றோதலும், திருவாதிரை தீர்த்தோற்சவமும் – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் திருவெம்பாவை நோன்பின் இறுதி நாள் திருவாதிரை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 30-12-2020 புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் அதிகாலை 03.30 மணிக்கு சிவகாமியம்மை சமேத சிதம்பரேஸ்வரப் (நடராஜர்) பெருமானுக்கு விசேட ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று விசேட பூஜை மற்றும் திருவெம்பாவை பா ஓதுதல் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக காட்சியளிக்கும் சிவகாமியம்மை சமேத சிதம்பரேஸ்வரப் பெருமானுக்கு விசேட தூப தீப ஆராதனைகள் நடைபெற்று, விசேட பஜனை பிரார்த்தனையுடன் உள்வீதி உலா வரும் நிகழ்வு இடம்பெறும்.

அதனையடுத்து திருமஞ்சனக் கிணற்றில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.

அடியார்கள் அனைவரும் தவறாது இந்த தீர்த்தோற்சவ நிகழ்வில் பங்கு கொண்டு சிவகாமியம்மை சமேத சிதம்பரேஸ்வரப் பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – திரு க.சிவப்பிரகாசம் குடும்பத்தினர் – நாகர்கோவில் கிழக்கு

குறிப்பு
29-12-2020 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஓதுவார்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்