நடேசரபிஷேகம்! ஆனி உத்தர உற்சவம்! – 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு நிகழும் சார்வரி வருஷம் ஆனி மாதம் 14ம்(28-06-2020)திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் முதல்நாளாகிய சனிக்கிழமை பின்னிரவு 3.00 மணியளவில் விநாயகர், மூலவர், சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமான் ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேகம் நடைபெற்று விசேட பூஜை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு விசேட தூப தீப ஆராதனைகளுடன் கூடிய அலங்கார பூஜை நடைபெற்று
உள்வீதி உலா உற்சவம் இடம்பெறவுள்ளது.

அருள்மிகு முருகையா ஆலயத்தில் நடைபெறும் ஆனி உத்தர நடேசரபிஷேகம், விஷேட பூஜை மற்றும் உற்சவ நிகழ்வுகளில் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தரிசித்து நடராசப் பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உபயகாரர் – திரு. க.சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு