வைகாசி விசாகம்! முருகையா அவதார நாள் விஷேட பூஜை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் வைகாசி மாதம் 04ம் (18-05-2019) நாள் சனிக்கிழமை வைகாசி விசாக விஷேட பூஜை சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

முருகையாவின் அவதார திருநாளாகிய இன்றைய தினம் நண்பகல் 12.00 மணியளவில் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம், நடைபெற்று தொடர்ந்து விசேட பூஜை இடம்பெறவுள்ளது.

முருகையாவின் திருவவதார நாளாகிய வைகாசி விசாக விஷேட பூஜையில் அடியார்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

உபயகாரர் – சுந்தரலிங்கம் – சஞ்சயன் குடும்பம் – லண்டன்

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு