ஆலய பூசகருக்கு சிவாச்சாரிய(குருப்பட்டம்)அபிஷேகம்!

நிகழும் மங்களகரமான விகாரி வருஷம் வைகாசி மாதம் 9ம்(23-05-2019) திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.40 மணி தொடக்கம் 11.36 மணி வரையுள்ள பஞ்சமி திதியும், உத்தராடம் நட்ஷத்திரமும், சித்த யோகமும் கூடிய நன்முகூர்த்த வேளையில்,

எமது ஆலய பூசகர் பிரம்மஸ்ரீ நாகேஸ்வரக்குருக்கள் நாகேந்திர சர்மா அவர்களுக்கு, கரணவாய் வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில், சைவாகம கிரியா சிரோன்மணி முத்து பாஸ்கர ரவிக் குருக்களினால் சிவாச்சாரிய அபிஷேகம் செய்து வைக்கப்படவுள்ளது என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு