பாலஸ்தாபன கும்பாபிஷேக விழா அறிவித்தல்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக பெருவிழாவின் முதற்கட்டமாக பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நிகழும் விளம்பி வருடம் பங்குனி மாதம் 10ம் (24-03-2019) திகதி  ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய நல்முகூர்த்த வேளையில்  நடைபெறவுள்ளது என்பதை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். 

பாலஸ்தாபன கும்பாபிஷேக கிரியைகள் யாவும் ஆலய பூசகர் நாகேந்திர சர்மா அவர்களின் பெரியதந்தையார் சிவாகம கிரியாரத்தினம் சிவஸ்ரீ கதிர் கிருஷ்ணேஸ்வரக் குருக்கள் ( ஆனைக்கோட்டை ஸ்ரீ மூத்த நயினார் ஆலயம்) அவர்களின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது..

இதற்கமைய 23-03-2019 சனிக்கிழமை மாலை 3.15 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகவுள்ளன. இதில் புண்ணியாகவாசனம், அனுக்ஞை, கணபதி ஹோமம், விநாயகா் வழிபாடு, வாஸ்து சாந்தி போன்ற கிரியைகள் நடைபெறவுள்ளன.

மறுநாள் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 06.10 தொடக்கம் 08.40 வரையான சுபமுகூர்த்த வேளையில் பாலஸ்தாபன கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

எம்பெருமான் அடியார்கள் அனைவரும் வருகை தந்து பாலஸ்தாபன கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து முருகையாவின் திருவருட்கடாட்சத்தினைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்