புத்தாண்டில் (2019) சங்காபிஷேகம்! உற்சவம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2019) தினமான செவ்வாய்க்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் சங்காபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணியளவில் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து விஷேட பூஜாராதனை நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு சிறப்பு தூப, தீபாராதனைகள் இடம்பெற்று, விஷேட மங்கள வாத்தியங்கள் முழங்க உள்வீதி உலா உற்சவம் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து ஆலய திருமடத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.

அன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆசாரசீலராய் வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுய்யுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம்- ஆறுமுகம்- மயில்வாகனம் குடும்பத்தினர் – அவுஸ்திரேலியா

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு