ஆவணி சதுர்த்தி விசேட பூஜை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் விளம்பி வருடம் ஆவணி மாதம் 28ம்(13-09-2018) திகதி வியாழக்கிழமை ஆவணி சதுர்த்தி விரத விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு விசேட ஸ்நபன அபிசேகம் நடைபெறும்..அதனைத் தொடர்ந்து பிள்ளையார் கதை படிப்பு இடம்பெறும்.

தொடர்ந்து விநாயகருக்குரிய விசேட நைவேத்தியங்கள் நிவேதனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜாராதனைகள் இடம்பெறும்.

எனவே இந்த சிறப்பான ஆவணி சதுர்த்தி விரத விசேட பூஜையில் எம்பெருமான் அடியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தரிசித்து விநாயகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயகாரர் – திரு ஆறுமுகம் – அழகராசா குடும்பத்தினர் – லண்டன்

நிர்வாக சபையினர்