ஸ்ரீ வீர மஹா காளியம்மன்! ஆடிப்பூரம் விசேட பூஜை!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ வீர மஹா காளியம்மனுக்கு எதிர்வரும் 13-08-2018 திங்கட்கிழமை, ஆடிப்பூர தினத்தன்று ஸ்நபன அபிசேகம், விசேட பூஜை என்பன நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் பிற்பகல் 3.00 மணிக்கு ஸ்ரீ வீரமஹா காளியம்மனுக்கு ஸ்நபன அபிசேகம் நடைபெற்று தொடர்ந்து விசேட பிரசாதங்கள் நிவேதனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜாராதனை இடம்பெறவுள்ளது.

எனவே அன்றைய ஆடிப்பூர விசேட தினத்தன்று அடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்து காளியம்மனின் விசேட அபிசேகம், சிறப்பு பூஜை என்பவற்றை கண்டு தரிசித்து அருள் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

உபயகாரர் – திரு.க.சிவபாதசுந்தரம் குடும்பம் – பருத்தித்துறை

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு

ஆடி அமாவாசை விரதம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் ஆடி அமாவாசை தினத்தன்று அடியார்களின் வசதி கருதி பிதிர்க்கடன் செலுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

எதிர்வரும் 11-08-2018 சனிக்கிழமை ஆடி அமாவாசை விரத நாளாகும்.

அன்றைய தினம் எமது ஆலயத்தில் விரதகாரர்களின் வசதி கருதி பிதிர்க்கடன் செலுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதாவது மோட்ச அர்ச்சனை மற்றும் தானம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த காலங்கள் போன்று நடைபெறும் என்பதையும் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு