ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருடம் சித்திரை மாதம் 06ம் (19-04-2018) நாள் வியாக்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் வளர்ந்து கட்டும் நிகழ்வு ஆரம்பிக்கவுள்ளது. எனவே நேர்த்திக் கடனை பூர்த்தி செய்யும் அடியார்கள் ஆலயத்திற்கு நேர காலத்துடன் வருகை தந்து வளர்ந்து கட்டும் நிகழ்வில் கலந்து ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

வளர்ந்து வைக்கும் அடியார்கள் வரும் பொழுது பானை மற்றும் அகப்பை மட்டும் கொண்டு வரவும். வளர்ந்துக்குரிய அரிசி மற்றும் பொருட்கள்  விறகு யாவும் ஆலயத்தில் நிர்வாக சபையினர் வழங்குவார்கள்.

கடந்த காலங்களை விட தற்போது விலைவாசி அதிகரித்துக் காணப்படுவதனால் வழங்கப்படும் பொருட்களுக்காக ஒவ்வொரு அடியாரிடமும் ரூபா ஆயிரம் (1000/=) அறவிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எனவே புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்பெருமான் அடியவர்கள் தாயகத்தில் வாழும் தங்கள் உறவுகளுடன் தொடர்பு கொண்டு இது விடயங்களை தெரியப்படுத்தி, ரோகிணி வளர்ந்து விசேட பூஜையில் விரும்பிய தங்கள் உறவுகள் பங்குபற்ற ஆவன செய்யுமாறு தங்களை இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு