மஹா சிவராத்திரி விரத விழா – 2018

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி விரத விழா மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்

நிகழும் ஏவிளம்பி வருடம் மாசி மாதம் 01ம் நாள் (13-02-2018)  செவ்வாய்க்கிழமையன்று மாலை 6.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 6.00 மணி வரை மஹா சிவராத்திரி விரத விழா நான்கு யாமப் பூஜைகளும் விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

முக்கியமாக லிங்கோற்பவ காலத்தில் (இரவு 12.00 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட காலம்) விஷேட ஸ்நபனாபிஷேகம் நடைபெறவுள்ளது.

அத்துடன் ஓதுவார் மூர்த்திகளினால் சிவராத்திரி புராணம் ஓதப்பட்டு விளக்கவுரை (பயன்) சொல்லப்படவுள்ளது.

ஆகவே சிவராத்திரி நன்னாளில் விரதம் அனுஷ்டிக்கும் மெய்யடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகை தந்து, உதிர்பூக்கள், பூமாலைகள், பால், இளநீர் ஆகிய பொருட்களைக் கொடுத்து, இயன்றளவு சரியைத் தொண்டுகள் செய்து,  புராண படனங்களைக் கேட்டுக்கொண்டு, நித்திரை விழித்து நான்கு யாமங்களிலும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்டு தரிசித்து வள்ளி, தேவசேனா சமேத முருகையாவின் திருவருள்கடாட்ஷத்தைப் பெற்றுய்யுமாறு வேண்டுகின்றோம்.

14-02-2018 புதன்கிழமை காலை பாரணை அன்னதானமும் இடம்பெறவுள்ளது.

உபயகாரர்கள் – வி.சின்னப்பொடி குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

நிர்வாகசபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *