தைப்பூச நாளில் தங்க நகைகள் அன்பளிப்பு!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இன்றைய தைப்பூச நன்னாளில் அடியார் ஒருவரினால் மூன்று தங்கச் சங்கிலிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

இன்றைய தினம் நண்பகல் நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த சோதிநாயகம் – அகிலாண்டேஸ்வரன் குடும்பத்தினராலேயே மூன்று தங்கச் சங்கிலிகள் ஆலயத்தில் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

மூன்று தங்கச் சங்கிலிகளும் சுமார் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் ரூபா பெறுமதி உடையதாயிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தங்கச் சங்கிலிகளை அன்பளிப்புச் செய்த அகிலாண்டேஸ்வரன் குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

முருகையா திருவருள் பாலித்தருள்வாராக!

நிர்வாக சபையினர்