அங்கத்தவர் விண்ணப்ப படிவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் பொதுச்சபை அங்கத்தவராக இணைந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவம் இங்கே தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

அதன் பிரகாரம் கீழே காணப்படும் Membership form என்றுள்ளதை கிளிக் செய்யும் போது இன்னுமொரு லிங்க் வரும். அதை கிளிக் பண்ணியவுடன் அங்கத்தவர் விண்ணப்பப் படிவம் வெளிப்படும். அதனை தாங்கள் Print எடுத்து உரிய முறைப்படி படிவத்தை பூர்த்தி செய்து ஆலய முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

தாங்கள் அனுப்பும் விண்ணப்பப் படிவம் ஆலயத்தில் கோவையில் சேமித்து வைக்கப்படும். தாங்கள் அங்கத்துவ சந்தாப் பணத்தை (1000 ரூபா)  ஆலய கரும பீடத்தில் செலுத்தி தங்களுக்குரிய உறுப்புரிமை இலக்கம் பொறிக்கப்பட்ட அங்கத்துவ அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

எதிர்வரும் 30-11-2018ம் திகதிக்கு முன்னதாக அங்கத்துவ விண்ணப்பப் படிவத்தை அனுப்பி, குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் சந்தாப் பணத்தை செலுத்தி அங்கத்துவ அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறித்த திகதிக்குள் அங்கத்துவ அடடையைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே 2019ம் ஆண்டைய பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

விண்ணப்பப் படிவம் அனுப்ப வேண்டிய ஆலய முகவரி-
MURUKAIYA THEVASTHANAM,
NAGARKOVIL NORTH,
NAGARKOVIL.

Membership form