திருவெம்பாவை விரத விஷேட பூஜை – 2017

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை, நிகழும் ஏவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 9ம் (24-12-2017) நாள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

விரத ஆரம்ப தினமான 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தினமும் அதிகாலை 4.30 மணியளவில் மூலமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை நடைபெறும்.

தொடர்ந்து திருவெம்பாவை பாடல்கள் பாராயண நிகழ்வுடன் பூஜை நிறைவுபெறும். ஆலய முதன்மை ஓதுவார் திரு ஏ.கணேசபிள்ளை அவர்களால் திருவெம்பாவை பாடல்கள் பாராயணம் செய்யப்படும்.

9ம் நாளன்று அதாவது 01-01-2018 திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு ஆலயத்தில் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருவாசக முற்றோதல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஆலய ஓதுவார் மூரத்திகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

இறுதி நாளன்று அதிகாலை மூலவருக்கும், சிவகாமியம்மை சமேத நடேசப் பெருமானுக்கும் விஷேட அபிஷேகம், விசேட பூஜை என்பன நடைபெற்று வழமை போன்று திருவெம்பாவை பாடல்கள் பாராயணம் செய்யப்பெற்று, இறுதியாக வசந்த மண்டபத்திலிருந்து மங்கள வாத்தியங்களுடன் சிவகாமியம்மை சமேத நடராஜப் பெருமான் உள்வீதி உலாவரும் உற்சவம் இடம்பெறும். தொடர்ந்து தீர்த்தோற்சவ நிகழ்வுடன் விழா பூர்த்தியடையும்.

திருவெம்பாவை பூஜை உபயகாரர்கள் விபரம்

01. திரு. பொ.நாகமுத்து குடும்பத்தினர்
02. திரு. வே.மயில்வாகனம் குடும்பத்தினர்
03. திரு. ஏ.கணேசபிள்ளை குடும்பத்தினர்
04. திரு. ந.செல்வராசா குடும்பத்தினர்
05. திரு. அ.கண்ணையா குடும்பத்தினர்
06. திரு.க.சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் – திரு. பொ.பழனியாண்டி குடும்பத்தினர்
07. திரு. ந.சபாரத்தினம் குடும்பத்தினர்
08. திரு. கு.நாகதம்பி குடும்பத்தினர்
09. திரு. ஏ.கிருஷ்ணகோபால் குடும்பத்தினர்
10. திரு. க.சிவப்பிரகாசம் குடும்பத்தினர்

எனவே உபயகாரர்கள் அனைவரும் தவறாது அதிகாலை வேளையில் வருகை தந்து தங்களது உபயங்களில் கலந்து கொண்டு தரிசித்து எம்பெருமானது நல்லருளையும், இஷ்ட சித்திகளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *