விநாயக ஷஷ்டி (பெருங்கதை) விரத பூஜை!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 9ம் (24-12-2017)  நாள்  ஞாயிற்றுக்கிழமை  விநாயக ஷஷ்டி  விரத விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் விநாயகப் பெருமானுக்கு விசேட உருத்திரா அபிசேகம் நடைபெறும்.. தொடர்ந்து பிள்ளையார் கதை படிப்பு இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணியளவில் விநாயகருக்குரிய விசேட நைவேத்தியங்கள் நிவேதனம் செய்து சிறப்பு பூஜாராதனைகள் இடம்பெறும்.

எனவே இந்த சிறப்பான விநாயக ஷஷ்டி (பெருங்கதை) விரத விசேட பூஜையில் எம்பெருமான் அடியவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தரிசித்து விநாயகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

 உபயகாரர் –  திரு ஆறுமுகம் – அழகராசா குடும்பத்தினர் – லண்டன்

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு