திருப்பணிக்கு உதவுமாறு வேண்டுகோள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணி வேலைகளுக்கு தாயக, புலம்பெயர் அடியார்கள் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கி ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இதுவரை காலமும் தாங்கள் மனமுவந்து வழங்கிய ஒத்துழைப்புகளின் மூலமாகவே சகல திருப்பணி வேலைகளையும் முன்னெடுத்திருந்தோம். அதற்கு முதல் நிர்வாக சபையினராகிய நாம் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்வதுடன், திருப்பணிக்கு உதவிய ஒவ்வொரு பக்தர்களுக்கும்  எம்பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம்.

இறுதியாக வெளியிட்டுள்ள திருப்பணி அறிக்கையின் படி சுமார் 6 இலட்சம் ரூபா வரையில் கடன் பெறப்பட்டுள்ளது. அதுவும் சில அடியார்கள் தாங்களாகவே வந்து நாங்கள் நிதியுதவி வழங்குகின்றோம் என்று கூறியதனால் அந்தப் பணம் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் தான் செயற்பட்டோம். ஆனால் அவர்கள் கூறிய கால தவணைகளுக்குள் அவர்களின் நிதி வந்து சேரவில்லை. எனினும் அவர்கள் விரைவில் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றோம்.

அத்துடன் சுற்றுக்கொட்டகை வேலைகளை பொறுப்பேற்றுள்ள ஆசாரியாருக்கு முற்பணமாக சுமார் பத்து இலட்சம் ரூபா வரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேலை முடிந்ததும் கணக்கு தருவார்கள். அவர்களின் நிலுவையும் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே கடந்த காலங்களைப் போன்று எம்பெருமான் மெய்யடியார்களிடம் இத்தருணத்தில் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம். தாங்கள் ஒவ்வொருவரும் மனமுவந்து அருள்மிகு முருகையாவின் திருப்பணிக்கு உதவுமாறு இருகரம் கூப்பி பணிவன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

முருகையாவுக்கு கிள்ளிக் கொடுங்கள்! அவர் உங்களுக்கு பல மடங்காக அள்ளித்தருவார்!  

இறுதி அறிக்கை வெளியிட்ட பின்னர் திருப்பணிக்கு உதவிய அன்பர்கள் விபரம்:-

01. திரு. ரமேஸ் – இராசநாயகம் – அவுஸ்திரேலியா –           5,000 ரூபா
02. திரு. சுகந்தா மயூரன் குடும்பம் – அவுஸ்திரேலியா –     11,600 ரூபா
03. திரு. தங்கமலர் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 20,000 ரூபா
04. திரு. சுஜீவரேகா – கெங்காசுதன் – அவுஸ்திரேலியா  –  10,200 ரூபா
05. திரு. ராஜ்குமார் குடும்பம் – அவுஸ்திரேலியா    –              6,400 ரூபா
06. திரு. கெங்காசுதன் குடும்பம் – அவுஸ்திரேலியா   –       23,600 ரூபா
07. திரு. மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா –      20,000 ரூபா
08. திரு. அனுசன் – தர்மராசா – அவுஸ்திரேலியா    –               6,380 ரூபா

நிதியுதவி வழங்க விரும்பும் அடியார்கள் கீழ்வரும் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம்  – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. –   79059813

விஷேட குறிப்பு:-
ஆலய நிர்வாக செயற்பாடுகளிலோ அல்லது நிர்வாக சபை உறுப்பினர்கள் யாரிடத்திலோ ஏதாவது குறைகள், குற்றங்கள், தவறுகள், தப்புகள் காணப்படின் அவைகளைச் சுட்டிக்காட்டி ஆலய முகவரிக்கு எழுத்துமூலமாக அறியத்தருமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –               0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –     0094 77 668 5054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –        0094 76 765 9415
4. வி.விக்னேஸ்வரன் உப தலைவர் – தொ.இல.  0094 76 747 7319
5. இ.ரவிச்சந்திரன் – நி. உறுப்பினர் – தொ.இல.     0094 77 087 1465
6. ப.அருள்தாஸ் – நி.உறுப்பினர் – தொ.இல.           0094 77 324 0457
7. சே.ரவிச்சந்திரன் – நி.உறுப்பினர் – தொ.இல.     0094 76 706 2123
8. ந.செல்வராசா – நி.உறுப்பினர் – தொ.இல.          0094 77 453 5592
9. ப.ஐங்கரன் – நி.உறுப்பினர்  – தொ.இல.                0094 77 517 3572

க.வேல்நாயகம் – கருமபீட அலுவலர்  –   தொ.இல.- 0094 77 441 5105

ஆ– நவரத்தினசாமி – ஆலய போஷகர் – தொ.இல– 0094 77 354 8525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: