எழுந்தருளி விக்கிரக மண்டலாபிஷேக பூஜை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2வது வருஷாபிஷேக நாளன்று நூதன பிரதிஷ்டா கும்பாபிஷேகம் செய்யப்பெற்ற வள்ளி தெய்வானை சமேத முருகையா எழுந்தருளி விக்கிரகத்திற்கு,

தற்பொழுது மண்டலாபிஷேக அபிஷேகம் நடைபெற்று வருகின்றது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

மண்டலாபிஷேக உபயகாரர்களின் விபரம் வருமாறு:-

01.  – 15-09-2017  –  பொது
02.  –  16-09-2017  –  கிருபாகரன் – கிருஸ்ணா – லண்டன்
03.  –  17-09-2017  –  க.சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு
04.  –  18-09-2017  –  க.சிவபாதசுந்தரம் குடும்பம் – பருத்தித்துறை
05.  –  19-09-2017  – கி.ஆறுமுகம் குடும்பம் – லண்டன் – அன்னதானம்
06.  –  20-09-2017  – ஏ.கணேசபிள்ளை குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு
07.  –  21-09-2017  –  வ.யோகேஸ்வரன் குடும்பம் – நாகர்கோவில் மேற்கு
08.  –  22-09-2017  –  மாணவர்களின் ஞாபகார்த்த உபயம் – அன்னதானம்
09.  –  23-09-2017  –  ந.செல்வராசா – நாகர்கோவில் கிழக்கு
10.  –  24-09-2017  –  சி.ஈசுரபாதம் குடும்பம் – நாகர்கோவில் தெற்கு
11.  –  25-09-2017  – வி.கேதீஸ்வரன் குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு
12.  –  26-09-2017  – ஆ.மாரிமுத்து ஞாபகார்த்த உபயம் – அன்னதானம் –

மண்டலாபிஷேக இறுதித்தினமான (12வது நாள்) 26-09-2017 செவ்வாய்க்கிழமையன்று மூலமூர்த்திகளுக்கு ஸ்நபனாபிஷேகமும் பரிவார தெய்வங்களுக்கு உருத்திராபிஷேகமும் நூதன எழுந்தருளி விக்கிரகத்திற்கு ஸ்நபனாபிஷேகமும் நடைபெற்று விசேட பூஜாராதனைகளுடன்  சுவாமி உலாவரும் உற்சவ நிகழ்வுடன்  மண்டலாபிஷேக விழா நிறைவுபெறும்.

அத்துடன் அன்றைய தினம் ஆலய திருமடத்தில் அன்னதானமும் நடைபெறவுள்ளது என்பதையும் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

ஆகவே அடியார்கள் அனைவரும் மண்டலாபிஷேக இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு எம்பெருமானைத் தரிசித்து இஷ்டசித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு