முருகையாவின் மெய்யடியார்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையாவின் மெய்யடியார்களுக்கு ஒரு முக்கியமான அறிவித்தலை விடுக்கின்றோம்.

மெய்யடியார்களே! கடந்த வருடம் 28-08-2016 அன்று முதலாவது வருஷாபிஷேக விழா நவோத்திர (1009) சங்காபிஷேகம் நடைபெற்று மிகவும் சிறப்பாக நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம்  வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்தியாகிய எம்பெருமானுக்கு அலங்காரம் பண்ணிக்கொண்டிருந்த வேளையில் விழாவை நடாத்த வந்த பிரதம குருக்கள் அவர்கள் அங்கு வந்து உற்சவ மூர்த்திகளைப் பார்வையிட்டார்.

அப்பொழுது அவர் எம்மை அழைத்து நீங்கள் இயலுமானால் இந்த எழுந்தருளி விக்கிரகத்தை மாற்றுங்கள்.. இது பழமையானது. அத்துடன் இதில் பல அங்கப் பிழைகள் உள்ளன. இதை மாற்றி புதிய விக்கிரகம் ஒன்றை செய்தால் இன்னும் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறிய போது ஐயா பார்க்கலாம் என பதில் கூறியிருந்தோம்.

அப்போது குருக்கள் அவர்கள் இந்த விக்கிரகத்தையும் பாவிக்கலாம். ஆனால் விசேட உற்சவ காலங்களில் புதிய விக்கிரகத்தை எழுந்தருளச் செய்தால் சிறப்பாக இருக்கும் எனவும் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக ஆலய நிர்வாக சபையினர் கலந்துரையாடி வள்ளி தேவசேனா சமேத முருகையா விக்கிரகம் ஒன்றை புதிதாக செய்வதாக முடிவு செய்தனர்.அத்துடன் அடியார் யாரிடமாவது கேட்டு இந்த விக்கிரகத்தை வாங்குவோம் எனவும் தீர்மானித்தனர்.

இதன்போது குறுக்கிட்ட ஆலய போஷகர், தற்போது ஆலயத்தில் உள்ள விக்கிரகம் பழமையானது,. அதை ஆலயத்திற்கு செய்து கொடுத்தவர்கள் யாரென்றும் தெரியவில்லை. அதனால் இந்த விக்கிரகத்தை எம்பெருமான் அனைத்து அடியார்களிடமும் பணம் சேர்த்து பொதுவாக வாங்குவதே நல்லது என ஆலய போஷகர் கூறிய கருத்தை வரவேற்ற நிர்வாக சபையினர் அதற்கு சம்மதமும் தெரிவித்தனர்

அதற்கிணங்க புதிதாக வள்ளி தேவசேனா சமேத முருகையா விக்கிரகம் ஒன்றைச் செய்வதற்கு சுமார் இரண்டரை லட்சம் (250,000) ரூபா நிதி தேவையாகவுள்ளது

எம்பெருமான் அடியார்களே! மேற்படி விக்கிரகத்தை எதிர்வரும் வருஷாபிஷேக தினத்துக்கு (15-09-2017) முன்னர் கொள்வனவு செய்வது நல்லது என தீர்மானித்துள்ளோம். ஆகவே எம்பெருமான் அடியார் பெருமக்கள் அனைவரும் மனமுவந்து தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பை வழங்கி ஒத்துழைப்பு நல்கி எம்பெருமானின் திருவருள் கடாட்சத்தைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

பங்களிப்பு வழங்க விரும்பும் அடியார்கள் நிதி அனுப்புவதற்கு ஆலய வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பி வைக்கலாம்.

ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.

இலங்கை வங்கி. – பருத்தித்துறை கிளை
01. சேமிப்புக் கணக்கு இலக்கம்  – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. –   79059813

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –            0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –   0094 77 6685054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –    0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: